கோவை: சிசிடிவி கண்காணிப்பு மையம் திறப்பு

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 04:50 pm
opening-of-cctv-surveillance-center

கோவையில் புதிதாக பொருத்துப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு மையத்தை கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரண் தொடங்கி வைத்தார். 

கோவையில் உள்ள ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 50 சி.சி.டி.வி கேமராக்களின் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  கோவை மாநகர காவல் துறை ஆணையர் சுமித் சரண் கலந்து கொண்டு கண்காணிப்பு மையத்தை தொடங்கி வைத்தார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சி சி டி வி கேமராக்கள் குற்றங்களை குறைக்க உதவுவதாக தெரிவித்தார். மேலும், கோவையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் உதவியுடன்  சி சி டி வி கேமராக்கள் பொருத்துவதற்கு துணை ஆணையர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close