இந்தப் பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: கொள்ளையர்களுடன் வந்த பொதுமக்களிடம் காவல்துறை அலட்சியம் !

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 06:42 pm
goat-robbery

திருச்சி மணப்பாறை அருகே மேய்ச்சலுக்கு கட்டி வைத்திருந்த ஆட்டை திருட முயன்றவர்களை பொதுமக்களே பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருச்சி மாவட்டம், கரட்டுப்பட்டி, வடதோட்டத்தில் வசித்து வருபவர் செபஸ்தியான். இவருக்கு சொந்தமான ஆடு ஒன்றை வீட்டின் அருகில் புல்வெளியில் மேய்ச்சலுக்காக கட்டிவைத்திருந்துள்ளார். அப்போது ஒரு ஆட்டோவில் வந்த மூன்று மர்ம நபர்கள் கட்டியிருந்த ஆட்டை அவிழ்த்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வேகமாக கிளம்பிச் சென்றனர். இதனைப்பார்த்த செபஸ்தியான் அவரது மகனுடன் இருசக்கரவாகனத்தில் பின்னால் துரத்தி சென்றுள்ளனர். இதனை கண்ட ஆட்டோ ஓட்டுநர் திடிரென ஆட்டோவை திருப்பியதில் நிலை தடுமாறி ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் ஒருவர் எதிரே வந்த பேருந்தில் ஏறி தப்பி சென்றுவிட்டார். 

ஆட்டோவை ஓட்டிவந்த திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் (35), மணிகண்டன்(36) ஆகிய இருவரையும் செபஸ்தியான் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பிடித்தனர். இது குறித்த தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து படையினரும், வையம்பட்டி காவல்துறையினரிடமும் பொதுமக்கள் இருவரையும் ஒப்படைத்தனர்.

ஆனால் ஆடு திருடப்பட்ட இடம் தங்களது எல்லைக்குள் இல்லை என வையம்பட்டி போலீசார் தெரிவிக்க மணப்பாறை காவல்நிலையத்திற்கு ஆட்டையும் பிடிபட்ட இருவரையும் போலீசார் கொண்டுவந்தனர். அங்கே மணப்பாறை போலீசார் சம்பவ இடம் தங்களது எல்லை இல்லை என தெரிவித்துள்ளனர்.

அப்போது சாலையில் நடக்கும் சம்பவங்கள் மட்டுமே தங்களது கட்டுப்பாட்டில் வரும் சாலைக்கு வெளியே நடைபெறும் சம்பவங்கள் மணப்பாறை போலீஸ் கட்டுப்பாட்டில் தான் வரும் என வையம்பட்டி போலீசார் தெரிவிக்க, ஒருவழியாக 4 மணிநேர அலைக்கழிப்பிற்கு பிறகு மணப்பாறை போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close