கோவையில் ஜன.23, 24ம் தேதிகளில் மின் தடை: மின்வாரியம் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 06:40 pm
coimbatore-power-cut-on-jan-23-24

கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 23, 24ம் தேதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவில்பாளையம் மற்றும் மத்தம்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 9ம் தேதி செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகள் வரும் 23ம் தேதி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே 23ம் தேதியன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். 

இதேபோல், தேவராயபுரம், எஸ்.என்.பாளையம், பி.என்.பாளையம், மருதூர், பவானி அணை ஆகிய பகுதிகளில் கடந்த 8ம் தேதி செய்ய வேண்டிய பாராமரிப்பு பணிகள் வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் 24ம் தேதியன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close