ஈஷா யோகா மையம்-தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் பொங்கல் விழா !

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 07:05 pm
pongal-festive

தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஈஷா நடத்தும் பொங்கல் விழாவில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், நாட்டு மாடுகளின் கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும், பொங்கல் விழாவையொட்டி பல்வேறு பாரம்பரிய மற்றும் கலாச்சார விழாக்கள்  கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் இணைந்து வரும் 16ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளது.  

இவ்விழா பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி மாலை 6மணி வரை நடைபெறும் எனவும், விழாவின் தொடக்கத்தில் பல்வேறு கலாச்சாரம் மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து மண்பானைகளில் பொங்கல் வைக்க உள்ளதாகவும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

மேலும், தாராபுரத்தைச் சேர்ந்த கிராமிய கலைஞர்களின் பறையாட்டம், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா, சம்ஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும், ஈஷாவில் வளர்க்கப்படும் காங்கேயம், ஆலம்பாடி, உம்பளாச்சேரி, ஓங்கோல், கிர், காங்கிரிஜ் உள்ளிட்ட 15 வகையான நாட்டு மாடுகளின் கண்காட்சி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close