தச்சன்குறிச்சி ஐல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் சி.விஜயபாஸ்கார் தொடங்கி வைத்தார்

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 10:07 am
thachankurichi-jallikattu-competition

தச்சன் குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டியில் 800 மாடுகள் மற்றும் 230 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன் குறிச்சியில் தமிழக அரசின் அனுமதியோடு  ஜல்லிப்போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.  800 மாடுகள் மற்றும் 230 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். வாடி வாசல் வழியே சீறி பாய்ந்து வரும் காளைகளை இளைஞர்கள் கட்டி தழுவி பிடிக்க முயன்று வருகின்றனர். 

முன்னதாக, மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே விளையாட அனுமதிக்கப்பட்டனர். மேலும், பாதுகாப்பிற்காக ஆம்புலன்ஸ், மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close