கஜா நிவாரணம்: விஏஓ மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 09:36 am
3-persons-arrested-for-vao-attacked

கஜாபுயல் நிவாரணம் வழங்கும் போது வேதாரண்யம் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், கஜாபுயல் நிவாரணப் பொருட்கள் வழங்கி  கொண்டிருந்த போது, பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டதாக கூறி கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணனுடன் 3 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தாக்குதலும் நடத்தினர். இது குறித்து விஏஓ அளித்த புகாரின் பேரில் வேதாரண்யம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தாக்குதல் நடத்தியவர்களை தேடி வந்தனர். 

இந்நிலையில், விஏஓ மீது தாக்குதல் நடத்திய வைரமுத்து, ஹரிகிருஷ்ணன், மணிமாறன் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close