முதலமைச்சர் வீட்டில் தீ விபத்து... சேலத்தில் பதற்றம்..!

  டேவிட்   | Last Modified : 14 Jan, 2019 01:16 pm

fire-accident-at-salem-house-of-cm

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சேலம் வீட்டின் முன்பு உள்ள பகுதியில் திடீரென தீப்பற்றியது.  தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சேலம் சென்றுள்ளார். சேலம் மாநகரில், நெடுஞ்சாலை இல்லத்தில் தற்போது பொதுமக்களை சந்தித்து வருகிறார்.  இந்நிலையில் மதியம் சுமார் ஒரு மணியளவில், அவரது இல்லம் அருகில் உள்ள காலி நிலத்தில் திடீரென தீப்பற்றியது. சம்பவம் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையைச் சேர்ந்த வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.