பூக்களின் விலை உயர்வு: வியாபாரிகள் மகிழ்ச்சி

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 02:50 pm
flower-price-increases

கஜா புயல் பாதிப்பு மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூ வரத்து குறைந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்வது வழக்கம். இந்த ஆண்டும், பொங்கல் பண்டிகை மற்றும் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள பூ விலை நிலவரம் குறித்து கீழே பார்ப்போம்..

ஜாதி மல்லி  ஒரு கிலோ ரூ.1500, (மற்ற நாட்களில் கிலோ ரூ.600க்கு விற்பனையாகும்)

காட்டு மல்லி (காக்கரட்டான்) ஒரு கிலோ ரூ.800 (மற்ற நாட்களில் கிலோ ரூ300)

செவ்வந்திப்பூ ஒரு கிலோ ரூ.150 (மற்ற நாட்களில் கிலோ ரூ.80)

ரோஜாப்பூ ஒரு கிலோ ரூ.260 (மற்ற நாட்களில் கிலோ ரூ.120)

கனகாம்பரம் பூ ரூ.1200 (மற்ற நாட்களில் கிலோ ரூ.600)

அரளிப்பூ ஒரு கிலோ ரூ.300 (மற்ற நாட்களில் கிலோ ரூ.150)

விச்சு பூ ஒரு கிலோ ரூ.120 (மற்ற நாட்களில் கிலோ ரூ.60)

கோழி கொண்டை பூ கிலோ ரூ. 80 (மற்ற நாட்களில் கிலோ ரூ.40)

மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.20

கடந்த மூன்று நாட்களாக இதே விலையில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விலையுயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close