கோவை: இருசக்கர வாகன திருட்டில் முக்கிய குற்றவாளி கைது - 15 வாகனங்கள் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 02:48 pm
one-of-the-major-culprits-arrested-in-motorcycle-theft

கோவையில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்து, அவனிடமிருந்த 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். 

கோவை மாவட்டத்தில், இருசக்கர வாகன திருட்டு அதிகாரித்து வந்ததை தொடர்ந்து, கோவை மாநகரக் குற்றப்பிரிவு துணை ஆணையர் பி.பெருமாள் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு திருடு போன வாகனங்கள் குறித்து புலனாய்வு செய்யப்பட்டது. அப்போது, ஈரோடு சூரப்பட்டியை சேர்ந்த மணியழகன் என்பவர் இருசக்கர வாகன திருட்டுகளில் முக்கிய குற்றவாளி என்பதை கண்டிறிந்து அவரை போலீசார் கைது செய்தனர். 

இதையடுத்து, அவரிடமிருந்து கோவை சித்ரா பகுதியில் இருந்து திருடப்பட்ட 4 இருசக்கர வாகனங்களும், காளப்பட்டி பகுதியில் திருடப்பட்ட ஒரு இருசக்கர வாகனமும், கணுவாய் பகுதியில் திருடப்பட்ட 2 வாகனங்களும், தஞ்சாவூரில் திருடப்பட்ட 5 வாகனங்களும், பழனி பகுதியில் 3 வாகனங்களும் என மொத்தம் 15 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதன் மொத்த மதிப்பு ரூ.4.24 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இவருடன் குற்றசம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close