கோவை: அம்மன் தோளைவிட்டு இறங்காத கிளி; ஆச்சரியத்தில் பக்தர்கள்...! (வீடியோ)

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 03:50 pm
surprise-parrot

கோவையில் வீட்டில் வளர்க்கப்பட்ட கிளி ஒன்று அம்மன் தோளை விட்டு இறங்காது அடம்பிடித்து கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். 

கோவையை அடுத்த பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். இவர் ஸ்ரீ என்ற பெயரில் கிளி ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் வெளியே அவரது மகனுடன் விளையாடி கொண்டிருந்த போது, திடீரென பறந்து சென்றதால் கோபமடைந்த முருகேஷ் கிளியை திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிளி வெளியே பறந்து சென்றுள்ளது.

பின்னர் கிளியின் உரிமையாளர் கிளியை தேடி சென்றபோது, அருகில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் அம்மன் சிலையின் தோள்பட்டையில் கிளி அமர்ந்திருந்துள்ளது. உரிமையாளர் கிளியை வரும்படி அழைத்தும் வராமல் அம்மன் தோளிலேயே அடம்பிடித்து அமர்ந்துள்ளது. நேற்று மாலை முதல் தற்போது வரை ஒரே இடத்தில் அமர்ந்துள்ளதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close