திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை: 15 பேர் கைது...!

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 04:57 pm
15-people-arrested-for-lottery-sales

திருச்சியில், லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருச்சியில், பொங்கல் விழாவையொட்டி பொதுமக்கள் அதிகம் கூடும் கடைவீதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முக்கிய பகுதிகளான கே.கே.நகர், அரியமங்கலம், திருவானைக்காவல், பாலக்கரை, சங்கிலியாண்டபுரம், பெரிய கடைவீதி, உய்யக்கொண்டான் திருமலை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் பொதுமக்களை போன்று சாதாரண உடையில் சோதனையில் ஈடுபட்டதால், லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர்கள் அவர்களிடம் விற்பனை செய்து கையும், களவுமாக பிடிப்பட்டனர். இது தொடர்பாக 15 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 100க்கும் மேற்பட்ட லாட்டரி டிக்கெட்டுள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்தனர். மேலும், சாகின்ஷா, பாண்டியன், நடராஜன் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

Newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close