மாட்டுப் பொங்கல்! சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்!

  சாரா   | Last Modified : 16 Jan, 2020 08:46 am
selling-on-cow-materials

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கயிறு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 

பொங்கலில் மாட்டுப்பொங்கல் தனி சிறப்பு பெற்றது. மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி, அழகுபடுத்தி, புதிய கயிறு மாற்றி, கலர் வண்ணங்கள் பூசி, மாடுகளை பிடித்த உணவுகளை சமைத்து படைப்பது வழக்கம். அதன்படி, நாளை மாட்டு பொங்கல் கொண்டாடுவதையொட்டி, திருச்சி காந்தி மார்க்கெட்டில் கயிறுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 

பலபல வண்ணங்களில், மூக்கணாங்கயிறு, முகரை செண்டு, சலங்கை கயிறு, நூல் கயிறு, மனிகயிறு போன்ற பல கயிறுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறைந்தப்பட்சம் 10 ரூபாயில் இருந்து அதிகப்பட்சமாக 400 ரூபாய் வரை கயிறுகள் விற்பனை செய்யப்படுகின்றன. 

மேலும் மாட்டிற்கு அழகு சேர்க்கும் சலங்கை, சங்கு கயிறு, உள்ளிட்ட கயிறு  வகைகள் அதிகமாக விற்பனையாகி வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.  

இது குறித்து மாடு வளர்க்கும் நபர் ஒருவர் கூறுகையில், " மாட்டுப் பொங்கலுக்கு கயிறு வாங்குவது வழக்கம். இந்த முறை அதிக அளவில் புதுமையான கயிறுகள் வந்திருப்பதால் எதை வாங்குவது என்று தெரியவில்லை. ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பது பாரம்பரியத்தில் ஒன்று. ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close