கோவையில் முதியோர் பொங்கல்... 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !

  சாரா   | Last Modified : 16 Jan, 2020 08:45 am
kovai-pongal-for-aged-people

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை தொண்டாமுத்தூர் பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் 300 க்கும் மேற்பட்டவர்கள் பொங்கல் வைத்தும் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடியும் மகிழ்ந்தனர்.

தமிழகளின் பாரம்பரிய பண்டிகையான  பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அனன்யா நானா நானி முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

முன்னதாக மண் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைத்து தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ந்தனர். பின்னர் அவ்வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மிட்டாய் கடையில் திண்பண்டங்களை வாங்கி ருசித்த முதியோர்கள் உரியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் பங்கேற்று மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான கோலாட்டம், சிலம்பாட்டம், சலங்கையாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியுடன் ரசித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close