எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: மாவட்ட ஆட்சியர் ரோஹிணி மாலை அணிவித்து மரியாதை..!

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 02:25 pm
mgr-birthday-celebration

எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி சேலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மணிமண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ரோஹிணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 102 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக,  சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மணிமண்டபத்தில் உள்ள எம்ஜிஆரின் திருஉருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ரோஹிணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல், மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆணையர் சதீஷ் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொது மக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close