கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ கிருஷ்ணமூர்த்தியின் உடலுக்கு ஜி.கே.வாசன் அஞ்சலி!

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 11:41 am
gk-vasan-pays-his-tribute-to-krishna-moorthy

மறைந்த கும்பகோணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தியின் உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கிருஷ்ண மூர்த்தி என்பவர் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினராகவும், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 16ஆம் தேதி காலமானார் .கிருஷ்ணமூர்த்தியின் சொந்த ஊரான கும்பகோணத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், பெருந்தலைவர் காமராஜர் ,மூப்பனார் ஆகியோரால் ஈர்க்கப்பட்டு இந்த இயக்கத்தில் ஐக்கியமானார் கிருஷ்ண மூர்த்தி. இவரது இழப்பு கட்சிக்கும், அவரது உற்றார் உறவினர்களுக்கும் பேரிழப்பு என்றும் தெரிவித்தார். பின்னர் கிருஷ்ணமூர்த்தியின் இறுதி ஊர்வலத்திலும் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close