சென்னையில் இந்தியன் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...!

  Newstm Desk   | Last Modified : 20 Jan, 2019 04:35 pm
indian-bank-employees-protest-in-chennai

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், இந்தியன் வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிரந்தர வங்கி ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கிருஷ்ணன், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எழுத்தர், கடைநிலை ஊழியர் மற்றும் துப்புரவு பணியில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பெண் ஊழியர்களுக்கு ஏற்பட கூடிய இயற்கை உபாதைகளை கணக்கில் கொண்டு அவர்கள் மீது திணிக்கப்படும் பணி சுமையை குறைக்க வேண்டும். பணியாளர்களை உரிய மதிப்போடு  நிர்வாகம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாகவும்,  இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக செவி சாய்க்கவிட்டால் தொடர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close