ஹிந்து ஆன்மீக கண்காட்சி: விவேகானந்தர் ரத யாத்திரையில் ஏராளமானோர் பங்கேற்பு..!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 10:41 am
vivekananda-ratha-yatra

ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி விவேகானந்தர் ரத பூஜை நடைபெற்றது. 

தமிழகத்தில் பத்தாவது ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவைக் கண்காட்சி வரும் 30ம் தேதி முதல் பிப்.4ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் முன்னோட்ட நிகழ்வாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் நேற்று சுவாமி விவேகானந்தர் ரத பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மைலாப்பூர் பகுதியில் உள்ள தெருக்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ரதயாத்திரை நடைபெற்றது. 

ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகளை பெருமைப்படுத்தும் விதமாக அந்தமான் சிறையை கண்முன்னே நிறுத்தும் அரங்கம், ஜாலியன் வாலாபாக் நிகழ்வின் ஒலி, ஒளி காட்சிகள், மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close