கும்பகோணம்: சுவாமிநாதர் கோவில் தைப்பூசத் திருவிழா...!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 12:59 pm
swaminathar-temple-festival

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத திருகோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் நான்காம் படை வீடாக போற்றப்படும் சுவாமி மலை சாமிநாதர் கோவிலில் கடந்த 11ம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் யானை வாகனம், குதிரை வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பத்தாம் நாளான இன்று  தங்க முலாம் பூசப்பட்ட மயில் வாகனத்தில் சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதி வழியாக சென்று காவிரியாற்றை அடைந்தனர். தொடர்ந்த தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close