மிஸ்டு கால் கொடுங்க... வீடு தேடி வரும் மொபைல் சர்வீஸ்...!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 03:55 pm
mobile-service-in-home

கோவையில் வீடு தேடி வந்து மொபைல் சர்வீஸ் செய்து தரும் சேவை மையத்தை திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் முதல் முறையாக மக்களுக்கு இலவசமாக வீடு தேடி சென்று  செல்போன் பிரச்சனைகளை சரிசெய்து கொடுக்கும் சேவையை முன்னணி மொபைல் நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையமான ஆஸ்கேர் என்ற நிறுவனம் கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வாடிக்கையாளர் சேவை மையத்தை திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தொடங்கி வைத்தார்.

இந்த சேவை மையம் மூலம் செல்போன் தொடர்பான பிரச்சனைக்கு "மிஸ்டு கால்" கொடுத்தால் அந்நிறுவனமே தொடர்பு கொண்டு வீட்டிற்கு வந்து மொபைல் சரிசெய்து கொடுக்கிறது. சரி செய்வதற்கான தொகையை தவிர வேறு எந்த சேவை கட்டணமும் பெறுவதில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close