கோவையில் பிப்.10 ஜல்லிக்கட்டு: 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு..

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 06:31 pm
feb-10-jallikkattu-competition-in-coimbatore

கோவையில் வரும் பிப்.10 ம் தேதி, ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெறவுள்ளதாக மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் வரும் பிப். 10ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில் 500 -க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும், 350-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்குபெறவுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை ஜல்லிக்கட்டு சங்கத்தின் செயலாளர் தங்கவேல், "நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கோவையைச் சேர்ந்த பல்வேறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கோவை ஜல்லிக்கட்டு சங்கம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியை, செட்டிப்பாளையத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் கோவையில் ஜல்லிக்கட்டை நேரில் காண மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். சிறப்பான முறையில் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது," என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close