அரசு பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 06:10 pm
government-bus-accident-one-dead

கடலூரில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். 

கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சின்னபுறங்கனியே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (55) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காடாம்புலியூர் காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பன்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close