சேலம்: பெண் குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு

  டேவிட்   | Last Modified : 23 Jan, 2019 07:57 pm
girls-violence-prevention-awareness-in-salem

பெண் குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். 

சேலத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. பேரணியை சேலம் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். 

சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது சங்ககிரி பிரதான சாலை வழியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை சென்று மீண்டும் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே முடிவடைந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close