10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் மீனவர் கைது

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 01:04 pm
sexual-abuse-of-10th-student-girl

சென்னை காசிமேட்டில் 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மீனவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

காசிமேடு சிங்காரவேலர் நகரில் கடந்த 26ம் தேதி கோவில் திருவிழா நடைபெற்றது. இரவு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் வீடு திரும்பிய  மாணவியிடம்  நடத்திய விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த திலோத் என்பவர் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து திலோத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர், அவரை புழல் சிறையில் அடைத்தனர். 

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close