வங்கிக் கொள்ளை: காவலர் பணியிடமாற்றம்!

  அனிதா   | Last Modified : 30 Jan, 2019 08:46 am
bank-robbery-constable-transfer

திருச்சி சமயபுரத்தில் வங்கி கொள்ளை நடைபெற்ற அன்று இரவு ரோந்து பணிக்கு செல்லாத காவலரை பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். 

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் நேற்று முன்தினம் (ஜன.28) வங்கியின் பின்பக்க சுவரில் துளையிட்டு 5 லாக்கர்களை உடைத்து அதிலிருந்த 410 சவரன் நகை மற்றும் ரூ.19 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் வங்கி மேலாளர் அறையில் இருந்த ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டிருந்தது. இது குறித்து 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், கொள்ளை நடைபெற்ற அன்று இரவு ரோந்து பணிக்கு செல்லாத காவலர் சகாயராஜை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close