கவலையுடன் விடைபெறும் யானைகள்..!

  அனிதா   | Last Modified : 30 Jan, 2019 01:35 pm
elephants-with-concern-for-farewell

கோவை தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் யானைகள் நலவாழ்வு முகாம் இன்று மாலை நிறைவடைவதால், சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் வகையில் யானைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு சார்பில், யானைகள் நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னுமிடத்தில் பவானி ஆற்றங்கரையோரம் கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் இருந்து 26 யானைகளும் புதுச்சேரியில் இருந்து 2 யானைகளும் என மொத்தம் 28 யானைகள் பங்கேற்றுள்ளன. இம்முகாமில் யானைகளுக்கு யானைகளுக்கு அரிசி, கொள்ளு, கேழ்வரகு, பாசிப்பயிறு, அவல் மற்றும் அவற்றுக்கு விருப்பமான கூந்தப்பனை உள்ளிட்ட பசுந்தீவனங்களும், பழவகைகளும், உடல் ஆரோக்கியத்திற்கான பல்வேறு ஊட்டச் சத்து மருந்துகளும் வழங்கப்பட்டன. 

தினசரி இரு வேளை பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு நடைப்பயிற்சியும் வழங்கப்பட்டன. மேலும் கால்நடை மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு யானைகளின் பார்வை குறைபாடு, பாத வெடிப்பு, குடல் புழுக்கள், உடலில் உள்ள கொப்பளங்கள் போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுத் தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. யானைகள் குளிப்பதற்கு பிரத்தேயகமான ஷவர் பாத் ஏற்பாடு செய்யப்பட்டு தினசரி இரண்டு முறை யானைகள் குளிக்க வைக்கப்பட்டன.

இந்த முகாம் ஒரு மண்டலம் என்ற கணக்கீட்டில் 48 நாட்கள் நடைபெற்று இன்றுடன் நிறைவடையவுள்ளது. கடந்த 47 நாட்களாக இயற்கை சூழலில் தனது  இனத்தைச் சேர்ந்த பிற யானைகளோடு கூட்டமாக ஒரே இடத்தில் தங்கி மகிழ்ச்சியாக இருந்த யானைகள், தற்போது முகாம் முடிந்து விட்டதால் சோகத்துடன் கிளம்ப தயாராகி வருவதாக பாகன்கள் தெரிவிக்கின்றனர். இன்று மாலை நடைபெறும் நிறைவு விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு பழங்களைக் கொடுத்து யானைகளை அந்தந்த சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close