கோவையில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது..!

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 03:00 pm
5-people-arrested-for-selling-ganja-in-coimbatore

கோவையில் சட்ட விரோதமாக போதை பொருள் விற்பனை செய்த 5 இளைஞர்களை  காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். 

கோவை சரவணம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்கள், ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கஞ்சா, அபின், போதை மாத்திரைகள் போன்ற சட்ட விரோத வியாபரங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சரவணம்பட்டி போலீசார் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் பாரதிராஜா தலைமையிலான சரவணம்பட்டி போலீஸார், சின்னவேடம்பட்டி சந்திப்பு அருகே நேற்று முன்தினம் (28.1.19) கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மோகித்குமார்(22), நதீஷ்குமார்(26), நவீன்குமார் (22) ஆகிய மூன்று இளைஞர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. 

இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து கார், இருசக்கர வாகனம் மற்றும் 2.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  கைது செய்யப்பட்ட மூவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, வடவள்ளி போலீஸார் வீரகேரளம் - நாகராஜபுரம் சாலையில் ரோந்து பணி மேற்கொண்டபோது, சந்தேகத்திற்குரிய முறையில் சுற்றிய இரண்டு பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கஞ்சா விற்பது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close