மலக்குழி மரணங்கள்... எஸ்.டி. நல துணைத் தலைவர் முருகன் எச்சரிக்கை !

  டேவிட்   | Last Modified : 31 Jan, 2019 05:11 pm
kovai-sc-st-murugan-warned

மலக்குழி மரணங்களின் போது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை தலைவர் முருகன் எச்சரித்துள்ளார்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற எஸ்.சி. எஸ்.டி வகுப்பினருக்கான குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை தலைவர் முருகன், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், ஏழை எளிய மக்கள் சென்னைக்கு வர முடியாததால் மாவட்ட தலைநகரங்களில் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும், சிங்காநல்லூரில் சாக்கடை குழியை சுத்தம் செய்ய முயன்ற போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கோவை மாவட்டத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 120 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டுள்ளது எனவும் எஸ்.டி.எஸ்.சி ஆணையம் பல வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி உரிய இழப்பீட்டை பெற்றுத் தந்துள்ளதாகவும் தெரிவித்தார். பாரதியார் பல்கலைகழக விவகாரத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close