சென்னை ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 12:12 pm
chennai-armed-force-constable-suicide

சென்னை கீழ்ப்பாக்கம் ஐஜி அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர் மணிகண்டன் என்பவர் இரவுப்பணியின் போது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தமிழக ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இன்று காலை 26வது பிறந்தநாளை, அவர் கொண்டாட இருந்த நிலையில், நேற்று இரவு கீழ்பாக்கம் ஐஜி அலுவலகத்தில் இரவுப்பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டன்  தூப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று திருச்சியில் சிறப்பு காவலராக பணிபுரிந்து வந்த முத்து என்பவர் ஓய்வறையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று ஆயுதப்படை காவலர் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close