திருச்சி: ரூ.3.45 லட்சம் தங்கம் பறிமுதல்..!

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 01:39 pm

gold-seized-in-trichy-airport

திருச்சி விமானநிலையத்தில் ரூ. 3.45 லட்சம் மதிப்புடைய தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளின் உடைமைகளை  வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது,  மலேசியாவை சேர்ந்த குனாலன் எல்லப்பன் என்பவர் தனது உடமைகளில் அனுமதியின்றி ரூ.3,44,952 மதிப்புள்ள 108 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க மோதிரம்,  2 தங்க வளையல்களை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close