மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை..!

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 12:54 pm
police-raid-at-madurai-central-jail

மதுரை மத்திய சிறையில் இன்று சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

மதுரை மத்திய சிறையில் பெண் கைதிகள் உட்பட 1300 கைதிகள் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் சிறைத்துறை துணைத்தலைவர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சிறையில் சோதனை நடத்தினர். இதில் கைதிகள் விதிகளை மீறி சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் பயன்படுத்துகின்றனரா, செல்போன் உள்ளிட்ட ஏதேனும் பொருட்கள் பயன்படுத்துகின்றனரா என போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும், உணவு தயாரிக்கும் பகுதிகள், கைதிகள் மற்றும் சிறை அலுவா்கள் பயன்படுத்தப்படும் அறைகள், கழிவறைகள் உள்ளிட்டவைகளிலும் சோதனை நடைபெற்றது. காலை 7.30 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில், தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கமிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close