பட்டப்பகலில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது..!

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 02:01 pm
two-arrested-including-a-girl-in-kanja-case

மதுரையில் பட்டப்பகலில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பாண்டி கோவில் சாலை வழியாக ஆட்டோவில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் பாண்டி கோவில் சாலைப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, 12 பொட்டலங்களில் மொத்தம் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. 

இதனை தொடர்ந்து கஞ்சா கடத்திய உசிலம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் லாவண்யா ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர்,  20 கிலோ கஞ்சா கடத்த பயன்பட்ட  ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் காவல்துறையினரின் சோதனையின் போது தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் உட்பட மூன்று பேர் சாமார்தியமாக கஞ்சா கடத்திய சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close