அடுத்தடுத்த மூதாட்டிகள் கொலை.. பணத்திற்காக கொலையா? காவல்துறை விசாரணை

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 03:17 pm
kill-the-grandmothers

மதுரை செல்லூர் பகுதியில் ஒரே வாரத்தில் 2 மூதாட்டிகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் செல்லூர் அருகேயுள்ள  சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முமுதாபீவி (87). இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகையை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்லூர் பகுதியில் உள்ள கட்டபொம்மன் நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் மூதாட்டி ஒருவரை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த பணத்தை எடுத்து சென்றுள்ளனர்.

அடுத்தடுத்து மூதாட்டிகளைத் தேடி கொலை செய்து கொள்ளையடித்துச் செல்வது குறித்து, புலனாய்ந்து வரும் காவல்துறையினர், திட்டமிட்ட வகையில் ஒரு கொள்ளைக் கும்பல் தனியாக வசித்து வரும் மூதாட்டிகளை அறிந்து இந்தக் கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்ற வருகின்றனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close