கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி: 679 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்பு

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 06:13 pm

jallikattu-competition-in-trichy

திருச்சி கலிங்கப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 679 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கலிங்கப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, காரைக்குடி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட 600க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் கட்டித்தழுவி அடக்கினர். சில காளைகள் வீரர்களை விரட்டி அடித்து வெற்றி வாகை சூடியது. வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், மிக்சி, கட்டில், சில்வர் பாத்திரங்கள்,  தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், ரொக்கப்பணம் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close