மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர் சாலைமறியல்..!

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 03:54 pm
relative-struggle-for-the-child-died-due-to-levity-of-doctors

சேலம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 15 மாத குழந்தை, முறையான சிகிச்சை அளிக்காததால் உயிரிந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த தம்பதி தனபால், பவளக்கொடி. இவர்களது 15 மாத குழந்தை மித்ரனுக்கு இருதய பாதிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இருந்ததால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

இந்நிலையில் பொங்கல் பண்டிகையின் போது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், மீண்டும் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மறுபடியும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில், குழந்தை மித்ரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான்.

குழந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்றும், முறையான சிகிச்சை அளிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் கூறி, குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்  50க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close