சென்னையில் தொடரும் கொலை முயற்சி சம்பவங்கள்.. தலை தூக்கும் ரவுடிகள்

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 04:11 pm
continuing-murder-attempts-in-chennai

சென்னை ஆவடி அருகே பேருந்தில் இருந்து கீழே இறங்கிய நபரை மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தனது சொந்த வேலைக்காக பேருந்து மூலம் ஆவடிக்கு சென்றுள்ளார். புதிய ஆவடி சாலையில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய சதீஷை திடீரென வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. இதில் சதீஷ் சுயநினைவை இழந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு கீழே விழுந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அயனாவரம் போலீசார் தாக்குதலில் படுகாயம் அடைந்திருந்த சதீஷை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அயனாவரம்  காவல்துறையினர், சதீஷ் ஆவடி வர என்ன காரணம், அவருக்கு யாருடனாவது முன்விரோதம் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close