பிளாஸ்டிக் தடை: மாணவர்களுக்கு சணல் பை வழங்கி விழிப்புணர்வு

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 07:41 pm
students-were-given-jute-bag

நெல்லையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சணல் பைகள் வழங்கப்பட்டன. 

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் மேல் நிலைப்பள்ளியில் உலக சதுப்பு நில தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில், பிளாஸ்டிக் இல்லா நெல்லையை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் எடுத்துரைக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர்.  நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களுக்கு பிளாஸ்டிக்  மாற்றாக சணல் பைகள் வழங்கப்பட்டன.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close