பிரியாணி கடைக்காரர் வெட்டிக் கொலை..!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 12:10 pm
briyani-shop-owner-killed

சென்னை தண்டையார்பேட்டையில் சைக்கிளில் சென்ற பிரியாணி கடைக்காரரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடைக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு சேனியம்மன் கோவில் தெருவில் தன்னுடைய சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பக்கமாக வந்த மர்ம நபர்கள் சிலர் ரவியை வழிமறித்து கழுத்தில் கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டிவிட்டும் தப்பி சென்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பக்கமாக சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தண்டையார்பேட்டை போலீசார், ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடையில் நிகழ்ந்த தகராறால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் அல்லது கடை அமைப்பதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணங்களில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close