திமுகவின் தென்காசி ஒன்றிய இலக்கியஅணி துணை அமைப்பாளர் ராஜினாமா..!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 01:19 pm
dmk-member-resigns

10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக வழக்கு தொடுத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி ஒன்றிய இலக்கியஅணி துணை அமைப்பாளர் ஆறுமுகம் தனது பதவி மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளருக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், "நான் இந்து சைவ வெள்ளாளர் என்ற முற்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். எனது தந்தையும், நானும் திமுக கட்சியின் தொண்டனாய் இருந்து தீவிர பணியாற்றினோம். சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட முற்பட்ட சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதை அறிந்து மிகவும் வேதனையுற்றேன்.

எங்கள் சமூகம் சாதிய இட ஒதுக்கீட்டினால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிவிட்டது. இதை திமுக தலைமையோ உடன் இருப்பவர்களோ அறியாதவர்கள் அல்ல. ஆனால் பதவி ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மிகவும் மன வேதனையடைந்தேன். 

எனவே மனசாட்சிக்கு உட்பட்டு, நானும் சாதிய இடஒதுக்கீட்டினால் பாதிக்கப்பட்டவன் என்கின்ற முறையிலும், தொடர்ந்து கழகத்தில் பணியாற்ற இயலாத மனநிலையிலும் இருப்பதால் கழக அடிமட்ட தொண்டர் மற்றும் தனது பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.   

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close