12 வயதில் 26 மொழி பேசி அசத்தும் சென்னை சிறுவன் !

  டேவிட்   | Last Modified : 04 Feb, 2019 01:35 pm
12-years-old-boy-speaking-26-languages

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த, 12 வயது அக்ரம் என்ற மாணவன் 26 மொழிகளில் பேசி அனைவரையும் வியப்பிற்குள் ஆழ்த்தினார். 

நிகழ்ச்சியில் அக்ரம் பேசியபோது,  4 வயதிலேயே மொழிகளின் மீது இருந்த தனித்திறமையை பார்த்து, அவரது தந்தை அப்துல் ஹமீத் பல மொழிகளை கற்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாகவும், இணையதளம் மூலமாகவே பல மொழிகளை கற்றேன் என்றும் பேசினார். 

மேலும் அக்ரம் பேசியதாவது: எந்த மொழியாக இருந்தாலும், இரண்டு, மூன்று நாட்களில் கற்று விடுவேன். தற்போது, இஸ்ரேல் பள்ளியில் ஆன்லைன் மூலம் கல்வி பயில்கிறேன். இதுவரை 25க்கும் மேற்பட்ட நாடுகள் சென்று வந்துள்ளேன்.  இது எனக்கு 148 வது நிகழ்ச்சி. நினைவாற்றல் குறைந்து விடுமோ என்பதால், சிறுவயதில் இருந்தே, சாக்லேட், ஐஸ்கிரீம், ஜங்க்புட் உண்பதோ, டிவி, வீடியோகேம் விளையாடுவதோ கிடையாது.  என்னைப் போன்றே அனைவரும் ஜங்க் புட்' உண்பதை விடுத்து சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை போன்ற சிறுதானிய உணவு வகைகளையே உண்ண வேண்டும் என விரும்புகிறேன்.  மாணவர்களுக்கு ஆங்கிலம், இந்தி, உருது, அரபி, சைனீஸ், பிரெஞ்ச் ஆகிய 5 மொழி தெரிந்தால் போதும், இந்த உலகத்தையே ஆளலாம் என பெருமிதத்துடன் பேசினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close