காதல் தோல்வி... பெண் போலீஸ் தற்கொலை...!

  டேவிட்   | Last Modified : 04 Feb, 2019 02:58 pm
love-failure-lady-constable-suicide

திருச்சி மகளிர் சிறையில் காவலாக பணியாற்றி வந்த செந்தமிழ் செல்வி நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது காவல்துறையினர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. நேற்று முன் தினம், சென்னை கீழ்ப்பாக்கம் ஐஜி அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர் மணிகண்டன் என்பவர் இரவுப்பணியின் போது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை  செய்து கொண்டார். அடுத்த நாளே, திருச்சியில் சிறப்பு காவலராக பணிபுரிந்து வந்த முத்து என்பவர் ஓய்வறையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.  

இதனையடுத்து திருச்சி மகளிர் சிறையில் காவலராக பணியாற்றிய செந்தமிழ்செல்வி மத்திய சிறை குடியிருப்பில் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

திருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வரும் போலீஸ் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் இருவருக்குள்ளும் ஏதோ மனஸ்தாபம் காரணமாக பிரிந்துவிட்டதாகவும், காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தமே முடிந்துவிட்ட நிலையில், வரும் 6-ம் தேதி காதலனுக்கு கல்யாணம் நடக்க உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த செந்தமிழ்செல்வி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close