நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்: ஜெயகுமார்

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 03:27 pm
the-coalition-will-be-led-by-aiadmk-in-parliamentary-elections

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், "இன்றைய சூழல் அதிமுகவிற்கு சாதகமாக உள்ளதாகவும் அதிமுகவினர் ஆர்வத்துடன் விருப்பமனுக்களை பெற்று வருகிறார்கள் என்றும் 40 தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் கூறினார்.

மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் தற்போதைய அதிமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் அம்மா பேரவை சார்பாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

அதிமுக தனித்து போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  தேர்தல் கூட்டணி, தொகுதிப்பங்கீடு தொடர்பாக 9 பேர் கொண்ட பங்கீட்டுக்குழு தான் முடிவு செய்யும் என்றும் தேசியக்கட்சி அல்லது எந்தக்கட்சியாக இருந்தாலும், அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி விவகாரம் குறித்த கேள்விக்கு, சிபிஐ அமைப்பிற்கு என்று தனி அதிகாரம் உண்டு, காவல்துறைக்கும் தனி அதிகாரம் உண்டு அதிகார வரம்பை யார் மீறியது என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close