மனைவியை குத்தி விட்டு, கணவன் தற்கொலை முயற்சி !

  டேவிட்   | Last Modified : 04 Feb, 2019 03:27 pm
husband-attacked-wife-and-suicide-attempt

சென்னை அரும்பாக்கத்தில் மனைவியை கத்தியால் குத்தி விட்டு, தானும் கத்தியால் குத்திக்கொண்ட கணவர் கவலைக்கிடமான நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சென்னை அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் தேவி. இவருடைய கணவர் ரமேஷ். கடந்த 3 ஆண்டுகளாக தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். இன்று காலை ரமேஷ் திடீரென வீட்டுக்கு வந்து  ஆதார் கார்டை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தேவியை சரமாரியாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தவுடன் அந்த கத்தியை வைத்து அவரும் வெட்டிக் கொண்டுள்ளார்.  

அதன்பிறகு காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு இரண்டு பேரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close