மாணவ, மாணவிகளுக்கான கலைநிகழ்ச்சி: 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 04:28 pm
concerts-for-students

கும்பகோணம் அன்னை கல்லூரி ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 1500க்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "அப்பா தி ரியல் ஹீரோ" என்ற தலைப்பில் 18ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். 

தஞ்சை பார்வையற்றோர் பள்ளியில் இருந்து சுமார் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு கிராமிய நடனம் ஆடினர். அவர்களது நடனத்தின் போது, மாணவ, மாணவிகள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தி ஆரவாரம் செய்தனர். மேலும்,  5 வயதுக்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட சிறுமிகளின் நடனத்தின் போது, கல்லூரி மாணவிகள் விசிலடித்து உற்சாகப்படுத்தினர். கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் சாருநிவேதிதா சான்றிதழ்களும், கேடயமும், பரிசுகளும் வழங்கி பாராட்டினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close