வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 65 பவுன் நகை கொள்ளை..!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 04:28 pm
gold-jewell-robbery-in-house

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் நகை மற்றும் ரூ.20,000 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

கோவை போத்தனூர் அருகே உள்ள பாரதிநகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சைமன் கிறீஸ்ட்டோபர். இவர் பீளமேடு அருகே உள்ள டிராவல்ஸ் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் குடும்பத்துடன் குன்னூரில் படிக்கும் தன் மகளை பார்க்க சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பியுள்ளனர். 

வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 65 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.20,000 ரொக்கம் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சைமன் அளித்த புகாரின் பேரில், போத்தனூர் காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து, தடவியல் நிபுணர்களை கொண்டு கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close