சேலம்: சாலை பாதுகாப்பு வார விழா - 100 பேருக்கு இலவச ஹெல்மட் !

  டேவிட்   | Last Modified : 04 Feb, 2019 05:24 pm
salem-free-helmet-distributed-for-100-persons-at-road-safety-awareness

சேலம் மாவட்டம் எடப்பாடியில் 30வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர பேரணி நடைபெற்றது. இதில் வாகன ஒட்டிகள் நூறு பேருக்கு இலவசமாக தலைகவசம் வழங்கி மாவட்ட எஸ்பி தீபா கனிஷ்கர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர். பேரணியை சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிஷ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  பேரணி கேட்டு கடையில் தொடங்கி பஸ் நிலையம் வந்தடைந்தது. 

பஸ் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிஷ்கர், தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை உணர்த்தும் வகையில் பல அறிவுரைகளை கூறினார். பின்னர் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையின் சார்பாக 100 பேருக்கு இலவசமாக ஹெல்மட் வழங்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close