சேலம்: உலக புற்றுநோய் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி !

  டேவிட்   | Last Modified : 04 Feb, 2019 05:37 pm
salem-world-cancer-awareness-photo-exhibition

உலகப் புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ஆம் தேதி பொது மக்களிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

சேலம் சண்முகம் மருத்துவமனை மற்றும் சேலம் புற்றுநோய் மையத்தில் உலக புற்றுநோய் தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு புகைப்படப் போட்டி, கடந்த ஒரு மாத காலமாக ஆன்லைனில் நடைபெற்றது.  

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகையும் சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். அப்போது புற்றுநோய் சம்பந்தமாக பொதுமக்களிடையே தற்பொழுது விழிப்புணர்வும் அதிகம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. உலக அளவில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

நிகழ்ச்சியில் சண்முகா மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். புகைப்பட கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான்கு பிரிவுகளில் தலா இருவர் வீதம் 8 நபர்களுக்கு ரூபாய் 80 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மருத்துவமனையின் மருத்துவர்கள் ஊழியர்கள் மாணவிகள் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close