9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது.,!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 12:42 pm
a-9-year-old-girl-was-sexually-harassed

சென்னை பட்டினம்பாக்கத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தேவராஜ் என்பவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பட்டினம்பக்கம் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து  வருபவர் அலெக்ஸ் (எ) தேவராஜ் (55). இவர் அதே பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் தாய் மற்றும் தந்தையை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இச்சம்பவம் நடந்து 20 நாட்கள் கழிந்த நிலையில் சிறுமிக்கு மீண்டும் தேவராஜ் பாலியல் தொந்தரவு கொடுக்க, இதனை சிறுமி தனது மூத்த சகோதரியிடம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சகோதரி பெற்றோரிடம் கூற அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பட்டினம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் தேவராஜை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close