ரயில் மின் கம்பியில் சிக்கிய பட்டம்: குடிபோதையில் பட்டத்தை எடுக்க சென்றவர் படுகாயம்

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 12:49 pm
one-injured-in-the-train-power-line

குடிபோதையில், ரயில் மின் கம்பியில் சிக்கிய பட்டத்தை எடுக்கச் சென்றவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் பணி செய்து வரும் சூர்யா, நேற்றிரவு குடிபோதையில் அங்குள்ள நடைமேடைகளில் சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில் ரயில் மின் கம்பியில் பட்டம் ஒன்று சிக்கியிருப்பதை கண்ட சூர்யா அதை எடுக்க மேலே ஏறியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கிய சூர்யா அலறியபடி கீழே விழுந்தார். இதனை கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் படுகாயங்களுடன் கிடந்த சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close