சிறுவாணி அணை நீர் மட்டம் சரிவு: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்..!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 02:47 pm
instruction-on-save-drinking-water

கோவை மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், நீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தும் படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கேரள வனப்பகுதியில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ததால் நவம்பர் மாதம் அணை நிரம்பியது. ஆனால் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவி கைகொடுக்கவில்லை. இருப்பினும், தினமும் எட்டு கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டு கோவை மாநகரப் பகுதியில் 33 வார்டுகளில் வசிப்போருக்கும், வழியோர கிராம மக்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

இதன் காரணமாக நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 50 அடியாக உள்ள சூழலில், தற்போதைய நிலவரப்படி 26.60 அடியாக உள்ளது. கோடை வெயில் அதிகரிக்கும் சூழலில், அணையில் தேங்கியுள்ள தண்ணீர் ஆவியாவது அதிகரிக்க துவங்கும் சூழல் இருப்பதால் நீர்மட்டம் இன்னும் வேகமாக குறையும்.  எனவே, பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close