சென்னை: ஒரே நாளில் ஒரே பகுதியில் 3 கொள்ளை சம்பவங்கள்..!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 03:39 pm
3-robberies-in-the-same-area-in-one-day

சென்னையில்  ஒரே நாளில் ஒரே பகுதியை சேர்ந்த 3 இடங்களில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள எல் பிளாக் 26வது தெருவில் வசித்து வருபவர் சத்யநாராயணன். வாகன ஷோரூம் உரிமையாளரான இவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றதை அறிந்த கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 107 சவரன் நகை, விலை உயர்ந்த 2 கைகடிகாரங்கள், 3 வெளிநாட்டு மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

அதேபோல், எல் பிளாக் 21வது தெருவில் உள்ள முரளி கிருஷ்ணா என்பவரது வீட்டிலும், ஜன்னல் கதவை உடைத்து சுமார் :ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும் சுமார் ரூ.2 லட்சம் ரொக்கப் பணம், 6 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கேமரா பதிவு கருவிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 இடங்களிலும் கொள்ளையடித்தது ஒரே கும்பலா அல்லது வெவ்வேறு நபர்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் ஒரே பகுதியைச் சேர்ந்த 3 இடங்களில் கொள்ளைபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close